இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை அச்சுறுத்தும் வாகனங்கள்!! கண்டுகொள்ளுமா காவல்துறை?!!

 -MMH 

பொள்ளாச்சி மீன்கரை சாலையில் நஞ்சை கவுண்டன் புதூர் பகுதியில் நேற்று இரவு மட்டை மஞ்சி துகள்களை ஏற்றுக்கொண்டு வந்த டிராக்டர் ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது, டிராக்டரில் இருந்து  ஏராளமான மஞ்சு துகள்கள் காற்றில் பறந்து, சாலையில் பயணம் செய்த இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்ணில்பட்டு, நிலை தடுமாறச் செய்தது.

நிலை தடுமாறிய ஒருவர் கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. வாகனத்தில் தார்ப்பாய் விரித்திருந்தாள் இந்த விபத்து நடந்து இருக்காது. அதேசமயம் அந்த வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லை. அதை இயக்கிய டிரைவருக்கு லைசென்ஸ் இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் இதுபோன்று  விபத்துக்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க காவல்துறை விதி மீறும் வாகனங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.

-M.சுரேஷ் குமார்.

Comments