வால்பாறையில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க முடியாமல் தவிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்!!

 -MMH 

வால்பாறையில் கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை, கடந்த சில நாட்களாக பெய்த மழை அனைத்தும் நின்று விட்டது. 

தற்போது வால்பாறையின் முக்கிய பருவ காலமான குளிர் பனிக்காலம் தொடங்கி இரவில் கடுமையான பனியும் குளிரும் நிலவுகிறது. இந்த நிலையில் பகலில் வால்பாறை சுற்று வட்டார பகுதி முழுவதும் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. கொளுத்தும் வெயில் காரணமாக வால்பாறையில் வெப்ப நிலை 26 டிகிரி செல்சியசாக இருந்து வருகிறது. இதனால் பொது மக்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இதனால் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள கூழாங்கல் ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் குறைந்ததோடு வற்ற தொடங்கி விட்டது. இதனால் சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து குறையத் தொடங்கியது. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் 158 அடியாக உள்ளது. சோலையாறு அணையின் மின்நிலையம் 1 மட்டும் இயக்கப்பட்டு மின் உற்பத்தி செய்த பின் 396 கன அடித் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

வால்பாறை பகுதியை பொறுத்தவரை இனி பனிக்காலம் என்பதால் மழை பெய்ய வாய்ப்பு இல்லை. மேலும் பனிக்காலத்தை தொடர்ந்து வருகிற நாட்களில் கோடைகாலம் தொடங்கி விடும். இந்த நிலையில் தற்போது வாட்டும் வெயிலையே தாங்க முடியாமல் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தலையில் குடைகள் மற்றும் தொப்பி அணிந்து கொண்டு தேயிலை பறிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-சி.ராஜேந்திரன், திவ்ய குமார், செந்தில்குமார்.

Comments