சென்னையில் நடைபெற்ற மனித உரிமைகள் குறித்த பயிற்சி பட்டறை!!

 -MMH 

டிசம்பர் 10 சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு "NCHRO" எனும் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு , "களம் காண்போம்" எனும் தலைப்பில் மனித உரிமை பயிற்சி பட்டறை இன்று 12/12/21 நடத்தபட்டது.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடந்த இப்பயிற்சி பட்டறையில் "தகவல் அறியும் உரிமை சட்டம்" ஆன்லைன் வழக்கு பதிவு , மனித உரிமை ஆணையத்தில் வழக்குகளை பதிவது போன்ற வகுப்புகளும், கருப்புச்சட்டங்களின் மூலம் எப்படியெல்லாம் மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றன என்பது குறித்தும், சமூக பணிகளத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், சம்பந்தப்பட்ட தளங்களில் பணியாற்றும் ஆர்வலர்களினால் வகுப்புகள் நிகழ்த்தபட்டன.

மாணவர்களும் - சமூக ஆர்வலர்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டனர்.

- நவாஸ்.

Comments