இந்தியன் தபால் வங்கியில் புதிய கட்டண முறை!!

   -MMH 

   இந்திய தபால் துறையின் கீழ் இந்தியன் போஸ்டல் பேமென்ட் பேங்க் இயக்கப்படுகிறது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த வங்கியின் மூலம் பயன் பெறுகின்றனர். சாதாரண, அடிப்படை மற்றும் டிஜிட்டல் என மூன்று வகையான சேமிப்பு கணக்குகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்தியன் போஸ்டல் பேமென்ட் பேங்க் கிளைகளில் பணம் டெபாசிட் மற்றும் எடுத்தல் பரிவர்த்தனைகளுக்கான கட்டண முறையை மாற்றி அமைத்துள்ளது. இதன்படி சாதாரண கணக்குகளில் மாதம் நான்கு முறை இலவசமாக பணத்தை எடுக்கலாம் பணத்தை டெபாசிட் செய்ய எந்த வரம்பும் இல்லை. சாதாரண கணக்குகள் அல்லாத சேமிப்பு மற்றும் நடப்பு கணக்குகள் மாதம் 25 ரூபாய் வரை இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம் மேலும் மாதம் 10 ஆயிரம் வரை இலவசமாக டெபாசிட் செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட வரம்புகளுக்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் மொத்த மதிப்பில் 0.50 சதவீதம் முதல் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் இந்த புதிய கட்டண முறை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என இந்தியன் போஸ்டல் பேமென்ட் பேங்க் தெரிவித்துள்ளது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments