பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கதறக்கதற தாக்கிய ஊழியர் சரவணம்பட்டியில் நடந்தது என்ன? கோவையில் பரபரப்பு!!
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கற்பகம் மில்ஸ் நூற்பாலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நிறுவனத்துக்கு சொந்தமான விடுதியில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வேலைக்கு விடுப்பு கோரியுள்ளார். அவரின் கோரிக்கையை நிராகரித்த வேலைக்கு வரும்படி நிர்ப்பந்தித்து தாக தெரிகிறது.
இதனால் அந்தப்பெண் வேலைக்கு செல்ல மறுத்ததாக கூறப்படும் நிலையில் விடுதிக் காப்பாளர் லதா, ஹெச்.ஆர் மேனேஜர் முத்தையா ஆகியோர் அந்தப் பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு தகாத வார்த்தையில் திட்டி அடித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் முத்தையா, லதா ஆகியோர் வடமாநிலத்தை சேர்ந்த 4 பெண்களை தாக்கியதாகவும், அதில் ஒரு பெண் வலி தாங்காமல் கதரி அழுததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் வீடியோ பதிவு வைரல் ஆனதை அடுத்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு, ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த சரவணம்பட்டி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து கற்பகம் மில்ஸ் நிர்வாகம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து பெண்கள் வேலைக்கு சேர்ந்ததாகவும். நிர்வாகத்துக்கு எந்தத் தகவலும் சொல்லாமல், வேலைக்கு வராமல் விடுதியிலேயே மது அருந்திக் கொண்டிருந்ததாகவும்,இதுகுறித்து பெண்களிடம் கேள்வி எழுப்பியபோது, அந்தப் பெண் வார்டனை கீழே தள்ளி விட்ட பிறகுதான் பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்தும் சரவணம்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.
Comments