கோவை சுகுணாபுரம் அருகே சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் பீதி! தீவிர கண்காணிப்பில் வனத்துறையினர்! !
குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த இரு நாட்களாக சிறுத்தை ஒன்று உலா வந்தது. மக்கள் பீதியடைந்தனர். தகவலறிந்த வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று தன்னாசியப்பன் கோவில் கேட்டிலும், உள் பகுதியிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டன.
மதுக்கரை வனச்சரகர் சந்தியா கூறுகையில், "சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய, இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார். இதுவரை ஆட்கள், கால்நடைகள், வளர்ப்பு நாய்களை தாக்கியதாக தகவல் இல்லை.அதன் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கண்காணித்த பின், மாவட்ட வன அலுவலரின் அனுமதி பெற்று கூண்டு வைக்கப்படும். மக்கள் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது," என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-S.ராஜேந்திரன்.
Comments