ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்கள் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் விபத்து...!!

  -MMH  

    மேட்டுப்பாளையம் பகுதி அருகே உள்ள தேரம் பாளையம் என்ற இடத்தில் ராணுவ ஹெலிகாப்டரில் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடலை எடுத்து வந்த ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானது. 

நேற்று முப்படை தளபதி பிபின் ராவத் , அவரது மனைவி மற்றும் இன்னும் சில ராணுவ வீரர்கள் குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தனர். இந்த விபத்து உலக நாடுகளையே உலுக்கி மக்களை அதிர்ச்சியில் உறையச் செய்தது. இவர்களின் உடலானது குன்னூர் ராணுவ பயிற்சி வளாகத்தில் தமிழக முதல்வர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் அஞ்சலிக்கு பிறகு டெல்லிக்கு இறுதி அஞ்சலிக்காக எடுத்துச் செல்ல முடிவெடுக்கப்பட்டு சாலை மார்க்கமாக ஆம்புலன்சில் உடல்கள் எடுத்து வரப்பட்டன. இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தெரம் பாளையம் என்ற இடத்தில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்த ஆம்புலன்ஸில் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் சிலர் காயமடைந்தனர். இதனால் விபத்துக்குள்ளான ஆம்புலன்சில் இருந்த உடல் வேறு ஆம்புலன்ஸில் மாற்றப்பட்டு சூலூர் விமான தளத்துக்கு சாலை மார்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. 

-சாதிக் அலி.

Comments