இலவச ஆடு வாங்க விண்ணப்பிக்கலாம்!!

   -MMH 

   கோவை மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு, 100 சதவீத மானியத்தில், 5 ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும், தலா, 100 பெண் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இப்பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும். தகுதியானவர்களிடம் இருந்து, கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கோவை மாவட்டத்தில், 12 ஒன்றியங்களிலும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன; இம்மாதம் இறுதி வரை பெறப்படும். ஒரு ஒன்றியத்துக்கு, 100 பெண் பயனாளிக்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, மானிய ஆடுகள் வழங்கப்படும்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments