இனிய 2022 பூத்துவரும் புத்தாண்டே, இப்பிரபஞ்சம் பொலிவுர புத்தொளி பாய்ச்சி வா!


-MMH 

புலர்ந்திருக்கும் இப்

புத்தாண்டில்

புவியெலாம்

தூயவளி நிரம்பட்டும்!

இயற்கையோடு இயைந்தே இன்பமாய்  

நாம் வாழ அன்பு விதை ஊன்றி, அருள் நீரூற்றி, உழைப்பொளி பாய்ச்சிடவும் வேண்டும்!

பருவத்தே

பயிர் செய்ய

பக்குவமாய்ப் பெய்து

மழை உயிரெலாம்

செழிக்கச் செய்யட்டும்!

இருக்கும்வரை இன்பமாய் வாழத்தான் உடலும் மனமும் ஒத்திசை பாடட்டும்!

பெயர் விழையாப்

பெருநோயெலாம் 

இவ்வகிலம்விட்டு அகன்றே ஓடட்டும்!

உழைப்புக்கு அஞ்சாது

பிறர் பொருளுக்கு ஏங்காது

இல்லார்க்குக் கொடுக்கத் தயங்காது

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று கண்டு

இதுவும் கடந்து போகும் ஆதலால் 

எதுவும் எனைத் தீண்டாது என்று துணிந்து

 உளம்நிறை உவகையோடு வாழ்வாங்கு வாழ உளமார வாழ்த்துவோம்.

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துடன் ,

-சோலை. ஜெய்க்குமார்,  Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments