இன்னும் பிடிக்கவில்லையா நெருங்க முடியாமல் திணறுகிறதா காவல்துறை!!

     -MMH 

      கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ரவீந்திரன் மற்றும் மேலும் சிலருக்கு ஆவின் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி  சுமார்  3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து விட்டதாக பாதிக்கப்பட்டோர் புகார் தெரிவித்திருந்த நிலையில் இது குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதை அறிந்த மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அவரை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு அண்டை மாநிலங்கள் என எல்லா   இடங்களிலும் தேடியும் மாஜி அமைச்சர் சிக்கவில்லை அவர் 

இருக்கும்  இடத்தைக்கூட நெருங்க முடியாமல் போலீஸ் படைகள் திணறி வருவதாக நம்பகத்தன்மை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அவரை கைது செய்வோம் என உயர் அதிகாரிகளுக்கு போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக தெரிகிறது. 

தமிழக துணை தலைமை நிருபர்,

-M.சுரேஷ்குமார்.

Comments