நெகமம் மின் அலுவலகம் முன் விபத்து..!!

   -MMH 

  நெகமம் கப்பளாங்கரை சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அருகே இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.

நெகமம் மின் அலுவலகத்தில் இருந்து வெளியே ஜேசிபி இயந்திரம் வந்துகொண்டிருந்தது. அந்த ஜேசிபி இயந்திரத்தில் மின் வேலை பணிகளுக்காக மின்கம்பங்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் தூக்கி கொண்டு வரப்பட்டு இருந்தது.

அப்போது நெகமம் கப்பளாகரை நோக்கி சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை ஓட்டியவர் எதிர்பாராதவிதமாக அந்த ஜேசிபி வாகனம் மீது மோதி கீழே விழுந்து காயம் அடைந்தார். மயக்கமுற்ற நிலையில் இருந்த அவரை பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மூலம் நெகமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நெகமம் காவல் துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.

Comments