பொள்ளாச்சி நெகமம் சாலையில் விபத்து..!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நெகமம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்துக்குள்ளானார்.
நெகமம் ரங்கம் புதூரை சேர்ந்த 35 வயது மதிக்க கூடிய நபர் ஒருவர் தனது வாகனத்தை அவர் தாய் பின்னால் உட்கார வைத்து அவரது ஊரான ரங்கம் புதுரை நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது ராசக்காபாளையத்திலிருந்து தொப்பம்பட்டி சாலை அருகே அவரது வாகனம் நிலை தடுமாறி முட்புதருக்குள் சென்று விபத்துக்குள்ளானது. அவர் சிறு காயங்களுடன் தப்பினார் தலையில் தலைக்கவசம் அணிந்திருந்தால் உயிர்தப்பினார். 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன் பொள்ளாச்சி.
Comments