கோவை டூ சிங்கப்பூர் விமானம் ரெடி!!!. பறக்க ரெடியா???

   -MMH 

   கோவை - சிங்கப்பூர் இடையேயான விமான சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, 2020ம் ஆண்டு துவக்கம் முதல், கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை நிறுத்தப்பட்டது.

அதன்பின், கோவை - சார்ஜா இடையே தினசரி விமான சேவை நடந்து வருகிறது. தற்போது, கோவை - சிங்கப்பூர் விமான சேவை மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. இந்த விமான சேவை வாரத்தில், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உண்டு. இரவு 10:45 மணிக்கு கோவை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானம், மீண்டும் இரவு 11:45 மணிக்கு கோவையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு செல்லும். இந்த விமான சேவையை, 'பிளை ஸ்கூட்' நிறுவனம் துவக்கியுள்ளது. விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், 'சிங்கப்பூரில் இருந்து நேரடியாக கோவை வருபவர்கள் மட்டுமே, இந்த விமானத்தில் பயணிக்க முடியும். வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து, அங்கிருந்து கோவை வர முயற்சி செய்பவர்கள் இந்த விமானத்தில் பயணிக்க முடியாது' என்றனர்.

-N.V.கண்ணபிரான்.

Comments