தஞ்சையில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு!!

   -MMH 

    மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று அனுமன் ஜெயந்தி உலகமெங்கும் உள்ள இந்து ஆலயங்களில் கொண்டாடப்பட்டது.

இந்து பண்டிகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது அனுமன் ஜெயந்தி விழாவாகும். ஸ்ரீ  ஆஞ்சிநேயர் பகவான்  மார்ச் மாதம் மூலம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பது ஐதீகம். அந்த நாளை ஆஞ்சநேய பக்தர்கள்   மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.

ஜனவரி 2 ஆம் தேதியான நேற்று தஞ்சையில் பல்வேறு ஆலயங்களில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. தஞ்சையில் மிகவும் பிரசித்தி பெற்ற மூலை ஆஞ்சநேயர் கோவிலில்  காலை முதலே பக்தர்கள் திரளாக வரிசையில் காத்திருந்து   ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர்.  

அதேபோன்று தஞ்சையில் ரயிலடியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர்  ஆலயத்திலும் காலை முதலே பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவேங்கடம் நகர் சங்கட நிவர்த்தி விநாயகர் ஆலயத்தில்  எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதியில் மாலை ஆறு முப்பது மணி அளவில் சிவாச்சாரியார் திரு ஞான சுந்தரம் அவர்களின் தலைமையில் விழாக்குழுவினர் சிறப்பான முறையில் ஆஞ்சநேயருக்கு  பல்வேறு விதமான அபிஷேக ஆராதனைகளை செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது .

வடை மாலை மற்றும் வெற்றிலை மாலை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கப்பட்டது. ஐயப்பன் நெய் அபிஷேகம் ஆஞ்சநேயர் பூஜை முடிந்தபின்பு தர்ம சாஸ்தாவான ஐயப்பனுக்கு  ஐயப்ப பக்தர்கள் நெய்யபிஷேகம் செய்வித்தனர். அதனை ஐயப்ப பக்தர் ஸ்ரீராம் அவர்கள் முன் நின்று நடத்தி வைத்தார். பின்னர் ஐயப்பனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்விக்கப்பட்டது .

இறுதியாக ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ ஐயப்பன் சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக அனைத்து பக்தர்களுக்கும்  ஐந்து விதமான அன்னதானங்கள் வழங்கப்பட்டன .

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர்  மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்திருந்தனர். அதனை சிறப்பான முறையில் திரு ஸ்ரீராம் ,திரு ராஜசேகர், ஓம் சக்தி திரு ராதாகிருஷ்ணன் மற்றும் குழுவினர் திறம்பட செயல் படுத்தினர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments

Ragavan said…
Swmiye saranam ayyapa ��
Anonymous said…
Swamiye saranam ayyapa 🙏