பாரதிய ஜனதா கட்சியின் 100வது வார்டு வேட்பாளர் செந்தில் குமார் மக்களிடம் வாக்கு சேகரிப்பு!!

 

-MMH

       கோவை உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியினரின் அதிரடி பிரச்சாரங்கள்! பாரதிய ஜனதா கட்சியின் 100வது வார்டு வேட்பாளர் செந்தில் குமார் மக்களிடம் வாக்கு சேகரிப்பு!!

கோவை மாவட்டத்தில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன இதில் வருகிற 19ம் தேதி நடைபெறுகின்ற உள்ளாட்சி தேர்தலில் அரசியல் கட்சியை சார்ந்தவர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

100வது வார்டில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த N.செந்தில்குமார் என்பவர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் அனைவரும் அறிந்த ஒருவராகவும் பொதுமக்களிடையே செல்வாக்கு மிக்கவராகவும் உள்ளார். மக்கள் எளிய முறையில் அணுகக்கூடிய சமூக ஆர்வலராகவும் உள்ளார்.

100வது வார்டு கவுன்சிலர் தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் திரு.N.செந்தில்குமார்  என்னை இந்த பகுதி கவுன்சிலராக தேர்ந்தெடுத்தால் நான் மக்களுக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் அறிந்து பணியாற்றுவேன். 

என்றும் இந்த பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை கழிவுநீர் வாய்க்கால் பிரச்சனை தெருக்களில் சாலை அமைப்பது மின் விளக்குகள் அமைப்பது   உட்பட அனைத்து வேலைகளையும் உடனடியாக செய்து கொடுப்பேன் என்று வாக்குறுதி அளித்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

வார்டு கவுன்சிலராக பொதுமக்களுக்கு என்னாலான என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அனைத்தையும் நான் செய்து கொடுப்பேன் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

நிருபர்கள்                   

-ஈசா. சி.ராஜேந்திரன்.

Comments