99 வது வார்டில் களமிறங்கிய கீதா மைதிலி மக்களிடையே வாக்கு சேகரிப்பு..!!

 

-MMH

        தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் களை கட்டிய நிலையில் பல்வேறு கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்கள் என போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது இந்நிலையில் கோவை மாவட்டம் போத்தனூர் குறிச்சி 99 வது வார்டு பகுதியில் களமிறங்கிய முன்னாள் வார்டு உறுப்பினரான கீதா மைதிலி மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்


. 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை இவர் குறிச்சி ஒன்பதாவது வார்டு உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்து வந்தார் இவர் தன்னுடைய வார்டு மக்களுக்கு இருக்கக்கூடிய அடிப்படை பிரச்சனைகளான தார்சாலை மின்விளக்கு குடிநீர் வசதி போன்ற அடிப்படை பிரச்சினைகளை முன்னெடுத்து சரி செய்து வந்த இவர் மீண்டும்  களமிறங்கியது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-ஈசா.

Comments