பாஜக வேட்பாளர்களை ஆதரித்து போத்தனூரில் அர்ஜுன் சம்பத் வாக்கு சேகரிப்பு..!!

 

-MMH

    கோவை மாவட்டம் தமிழகத்தில் உள்ளாட்சித் வருகின்ற 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் திமுக அதிமுக மற்றும் இதர கட்சிகள் மக்களிடத்தில் பரபரப்பாக வாக்கு சேகரித்து வந்த நிலையில் பாஜக வேட்பாளர்களை கோகுலகிருஷ்ணன் மற்றும் செந்தில் இருவரையும் ஆதரித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நேற்றைய தினம் 99 வார்டு பகுதியில் வாக்கு சேகரித்தார். 

பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் மக்களுடைய அடிப்படை பிரச்சினைகளை உடனுக்குடன் சரி செய்து தருகிறோம் என்று வாக்கு சேகரித்த அர்ஜுன் சம்பத்துடன் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-ஈசா.

Comments