அகில இந்திய மக்கள் உரிமைகள் சார்பாக நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது!!

-MMH

       அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பாக நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்களுக்கு கோவையில் பாராட்டு விழா  நடைபெற்றது. அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் சார்பாக மாண்புமிகு நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும்    சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது..நிறுவனத் தலைவர் R.K. குமார்  தலைமையில்,நடைபெற்ற விழாவில்,தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகள்  வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து,, கோவையில் பல்வேறு சமூக சேவை திட்டங்களை செயல்படுத்தி வரும், நேரு நகர் அரிமா சங்கத்தின் தலைவர். லயன் செந்தில் குமாருக்கு, சிறந்த சாதனையாளர் விருதை நீதியரசர் கற்பக விநாயகம்  வழங்கி கவுரவித்தார்.விழாவில், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின்,மாநில தலைவர் N. சுந்தர வடிவேலு ,துணைத் தலைவர் S.N. பாலசுப்பிரமணியன், கௌரவத் தலைவர் D.K. கார்த்திகேயன், பொது செயலாளர் டாக்டர். V.H. சுப்பிரமணியம், கௌரவத் தலைவர் R.ராஜேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.இதில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments