மின்சாரம் தாக்கி யானை பலி!!

 

-MMH

       கோவை மாவட்டம் சின்னதடாகம் ரோட்டில் உள்ளது வரப்பாளையம். இங்கு விவசாயி மனோகரனுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவர், விவசாய பயிர்களை, வன விலங்குகளிடமிருந்து பாதுகாக்க மின் வேலி அமைத்து உள்ளார்.

நேற்று முன்தினம் இரவு, பொன்னூத்து அம்மன் கோவில் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த ஆண் யானை ஒன்று மனோகரன் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலி அருகே வந்தது. மின் வேலியை தாண்ட முயன்ற போது, யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும்

இச்சம்பவம், தொடர்பாக விவசாயி மனோகரனிடம், வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments