இ-மெயில் மூலம் பணம் மோசடி!!

   -MMH 

    கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்தவர் மோனிகா (வயது 26). தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் தனது இமெயிலுக்கு வந்த லிங்கை பயன்படுத்தி 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை தனது வங்கிக் கணக்கை பயன்படுத்தி ஆர்டர் செய்துள்ளார்.

பின்னர், அந்த லிங்க்கிலிருந்து எந்த தகவலும் வராத நிலையில் சந்தேகமடைந்த மோனிகா தனது வங்கிக் கணக்கை சரி பார்த்த பொழுது அதிலிருந்து  வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோனிகா இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயதேவி, சப் இன்ஸ் பெக்டர் ரமேஷ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுபோன்ற போலியான லிங்குகளை பயன்படுத்தி பொருட்களை வாங்குவதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments