கோவின் காவல் தெய்வத்தின் திருவிழா : மத நல்லிணக்கத்தினை நிலை நாட்டிய மக்கள்..!

     -MMH 

   கோவையில் கோனியம்மன் தேர் திருவிழாவுக்கு வந்த பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவிலின் தேர் திருவிழா இன்று நடைபெறுகிறது.

இதனையொட்டி, மணிக்கூண்டு டவுன்ஹால், ஒப்பனக்கார வீதி, பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

இந்த நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒப்பணக்கார வீதி பகுதியில் உள்ள அத்தர் ஜாமத் பள்ளி வாசல் முன்பாக நின்றிருந்த இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்தனர். மேலும், நேர்த்திக்கடன் செலுத்த தீச்சட்டியுடன் வந்தவர்களுக்கு, அவர்களே குடிநீரை வழங்கினர்.

இந்த செயலை பார்த்து பூரிப்படைந்தவர்கள் சாதி மதம் மனிதர்களாக வந்தவை ,மனிதநேயமே நிரந்தரமான தெரிவித்திருக்கின்றனர்.

- சீனி,போத்தனூர்.

Comments