கோவையில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க முகாம்!

   -MMH 

   கோவை மாநகராட்சியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் இன்று முதல் 19ந் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் 4 லட்சத்து, 47 ஆயிரத்து, 446 குழந்தைகள் மருந்துபெற தகுதி பெற்றுள்ளனர்.நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, கிராமப்புறங்களில் இதனால் அதிக குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். குடற்புழு நீக்கினால் குழந்தைகளுக்கு ரத்தசோகை தடுக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.32 நகர் நல மையங்களிலும், 251 அரசுப் பள்ளிகள், 249 தனியார் பள்ளிகள், 37 கல்லுாரிகளிலும் குடற்புழு நீக்க முகாம் நடக்கிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு வரும், 21ம் தேதி காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை சிறப்பு முகாம் இடம்பெறுகிறது.குடற்புழு நீக்க மருந்து பெற, 2 லட்சத்து, 32 ஆயிரத்து, 898 ஆண் சிறார்கள், 2 லட்சத்து, 14 ஆயிரத்து, 548 பெண் சிறார்கள் என, 4 லட்சத்து, 47 ஆயிரத்து, 446 குழந்தைகள் கோவை மாநகராட்சியில் உள்ளனர். எனவே, 1 முதல், 19 வயதுடைய சிறார்கள், 20 முதல், 30 வயதுடைய பெண்களும் குடற்புழு நீக்க முகாமில் தவறாது கலந்துகொண்டு பயன்பெறலாம் என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments