கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக - அதிமுக வினரிடையே ஏற்ப்பட்ட மோதல் - மறு மறைமுக தேர்தல்!!

 

 -MMH 

கோவை வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுக- அதிமுக வினரிடையே ஏற்ப்பட்ட மோதல்- மறு மறைமுக தேர்தல் நடத்த வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு. 

கோவை வெள்ளலூர் பேரூராட்சி தேர்தலை நடத்த விடாமல்  திமுகவினர் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் மறு மறைமுக தேர்தல் நடத்த கோரியும் முன்னாள் அமைச்சர்  எஸ்.பி.வேலுமணி, கோவை மாநகர காவல் ஆணையர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கவுன்சிலர்களுடன் வந்து  புகார் அளித்தார். 

கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் இன்று காலை திமுக மற்றும் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து அப் பேரூராட்சியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெள்ளளூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் 8 பேருடன் கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் மற்றும் கோவை மாவட்ம ஆட்சியர் சமீரன் ஆகியோரிடம் மனு அளித்தார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் வெளியூர் நபர்களை வைத்து திமுகவினர்  வன்முறை நடத்துகின்றனர் என தெரிவித்தார். முறைகேடான வகையில் அதிமுகவின் வெற்றியை பறித்தார்கள் எனவும் கூறினார்.

வெள்ளளூர் பேரூராட்சியில் அதிமுக கவுன்சிலர்களை கத்தி, கம்புடன் வந்து தாக்கி இருக்கின்றனர் எனவும் காரை சேதப்படுத்தி இருக்கின்றனர் எனவுன் குற்றம்சாட்டிய அவர், இந்த தேர்தல் வன்முறைகள் கோவைக்கு  புதுமையாக இருக்கின்றது என் தெரிவித்தார். 

எனவே வெள்ளளூர் பேரூராட்சி தேர்தலை தள்ளி வைத்து இருக்கின்றனர் எனவும் இது  நியாயமே இல்லை எனவும் கூறிய அவர் வெள்ளளூர் பேரூராட்சி அதிமுக  கவுன்சிலர்கள் 8 பேரையும் ஆட்சியர்  முன்னிலையில் நிறுத்தி இருக்கின்றோம் எனவும், அதிமுகவினரை தாக்கிவிட்டு திமுகவினர் காவல் துறையில்  பொய் புகார் கொடுத்து இருக்கின்றனர் எனவும்,

அடித்துவிட்டு  அவர்களே பொய் புகார் கொடுத்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார்.வெள்ளளூர் பேரூராட்சியில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என  தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments