தெங்குமரஹாடாவில் மறுகுடியமர்வு குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெற்றது!!

    -MMH 

   தெங்குமரஹாடாவில் மறுகுடியமர்வு குறித்த கருத்துக்கேட்புக் கூட்டம் நேற்று (மார்ச் 06) மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மத்தியில் நடைபெற்றது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகத்தின் மத்தியில் அமைந்துள்ள தெங்குமரஹாடா வனக்கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 400க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களை சமவெளி பகுதியில் மறுகுடியமர்த்துவது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் தெங்குமரஹாடா அரசுப் பள்ளியில் நேற்று (மார்ச் 06) நடைபெற்றது. இதில் கரூர், ரோடு, கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள், புலிகள் காப்பக அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர் நிகர் ரஞ்சன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணணுன்னி, சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநர் கிருபா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆட்சியர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில் 250க்கும் மேற்பட்ட மக்கள் தெங்குமரஹாடவில் இருந்து வெளியேறி சமவெளி பகுதிக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து. ஆதார், ரேசன் கார்டு இணைத்து மனுவாக தாக்கல் செய்தனர். தெங்குமராஹடா கூட்டுறவு பண்ணை உறுப்பினர்கள் 142 பேர் அங்கேயே வசிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருமாறு கேட்டுக்கொண்டனர்.

கிராமத்தில் இருந்து வெளியேற விரும்பம் தெரிவித்துள்ள கிராமமக்களின் கருத்துகளை 3 மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை அதிகாரிகள் சட்டரீதியாக பதிவு செய்தனர். கிாரம மக்களின் கருத்துகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

-சுரேந்தர்.

Comments