முத்துசாமிபுதூர் ராமர்பண்ணை அருள்மிகு மஹாகணபதி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா!!

   -MMH 

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் அடுத்த முத்துசாமிபுதூர் ராமர்பண்ணை பகுதியில் அமைந்துள்ள  அருள்மிகு மகா கணபதிக்கு மகா கும்பாபிஷேக விழா  பொள்ளாச்சி சமத்தூர் செல்வமுத்துக்குமாரசாமி குருக்கள் ( சுரேஷ் )  தலைமையிலும் மற்றும்  திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள்  முன்னிலையிலும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி வெளியூர் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கோபுர மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றபோது கருடபகவான் வானத்தில் வட்டமிட்டதை கண்டு பக்தர்கள் மெய்சிலிர்த்தனர் இதனைத் தொடர்ந்து மகா அபிஷேக தச தரிசனம் நடைபெற்றது  இதனைத்தொடர்ந்து

மகா கணபதிக்கு  அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு  தீபாராதனை  பிரசாதம், பிரசாதம்  வழங்கப்பட்டது  மேலும் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் தானத்தில் சிறந்த தானம் என்று வர்ணிக்கப்படும் அன்னதானம் நடைபெற்றது.

-M.சுரேஷ்குமார்.

Comments