1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும் ! - பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர்.

   -MMH 

   1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம்  வகுப்பு வரை மாணவர்களுக்கு கண்டிப்பாக இறுதித்தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை முதல்மைச்செயலாளர் காகர்லா உஷா தெரிவித்துள்ளார். தேர்வுகள் யாருக்கும் ரத்துசெய்யப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக மே மாதத்தில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 13 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாது என நேற்று தகவல்கள் வெளியானது. இதையடுத்து, தேர்வு நடைபெறாது என்று வெளிவந்த செய்து தவறானது என்றும், அனைத்து மாணவர்களுக்கும் கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை முதல்மைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் படி எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் யாரும்  தோல்வியடைய செய்யமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-நம்ம நண்பன்.

Comments