24 மணி நேரமும் சட்டத்துக்கு புறம்பாக அதிக விலைக்கு மது விற்பனை!! நடவடிக்கை எடுப்பார்களா.. அதிகாரிகள்?

   -MMH 

  மடத்துக்குளம் தாலுகா கொழுமம் அருகே டாஸ்மார்க் பார் உள்ளது. இந்த பாரில் 24 மணி நேரமும் சட்டத்துக்கு புறம்பாக அதிக விலைக்கு மது விற்பனை செய்து வருகிறார்கள். இவருக்கு துணையாக அரசியல்வாதிகளும் காவல்துறையினரும் செயல்படுகின்றனர்.  

மது அமலாக்கத்துறை துணையுடன் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த தகவலை பொதுமக்கள் காவல்துறைக்கும் தெரிவித்தால் சிறிய அபராதம் விதித்து விட்டு விடுவார்கள். மறுநிமிடமே மது விற்பனை நடைபெறும்.

இதேபோல் மயிலா புரத்தில் பார் உள்ளது. இந்த பாரிலும் சட்டத்துக்கு புறம்பாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் மில் பேப்பர் மில்ஸ் மிக அதிகமாக உள்ளது. இந்திக்காரர்கள் இங்கே அதிகமாக வேலை செய்து வருகிறார்கள் வசித்தும் வருகிறார்கள். இவர்களுக்கு மது விற்பனை செய்து வருகிறார்கள். செய்திகள் எத்தனையோ முறை போட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா பொருத்திருந்து பார்ப்போம்.

-துல்கர்னி உடுமலை.

Comments