கோவை மாவட்டத்தில் இன்று 27வது மெகா தடுப்பூசி முகாம்!!

 

-MMH

    கோவை மாவட்டத்தில், 27வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது. கிராமப்புறங்களில் 376 முகாம்களும், நகர பகுதியில் 138 முகாம்களும் நடத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.இதுவரை நடந்த முகாம்களில், 18 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். மாவட்டத்தில், 99.52 சதவீதம் பேருக்கு முதல் 'டோஸ்'; 88.89 சதவீதம் பேருக்கு இரண்டாம் 'டோஸ்' தடுப்பூசி போடப்பட்டுள்ளது.பூஸ்டர் 'டோஸ்', 51,849 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,33,969 சிறுவர்களுக்கு முதல் தவணையும், 1,07,021 சிறுவர்களுக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.மார்ச் 16 முதல் கோர்பிவேக்ஸ் தடுப்பூசி, 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு செலுத்தப்படுகிறது.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments