கோவையில் 'வீ லிட்டில்' என்ற குழந்தைகளுக்கான சிறப்பு பல் மருத்துவமனை!!

   -MMH 

   கோவையில் 'வீ லிட்டில்' என்ற குழந்தைகளுக்கான சிறப்பு பல் மருத்துவமனையை நடிகை சமீரா ரெட்டி  துவக்கி வைத்தார்.

கோவை அவினாசி சாலை அண்ணாசிலை சிக்னல் அருகே 'வி லிட்டில்' என்ற குழந்தைகளுக்கான பல் மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு மருத்துவமனையின் துவக்கவிழா நிகழ்ச்சியில் நடிகை சமீரா ரெட்டி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி மருத்துவமனையை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து மருத்துவமனையின் தலைவர் ஷிபா கூறுகையில், "வரும் முன் காப்போம் என்பதன் அடிப்படையில் இந்தியாவில் முதல் முன்னெச்சரிக்கை மருத்துவமனையாக வி லிட்டில் துவங்கப்பட்டுள்ளது.

இங்கு, பிறந்த குழந்தை முதல் 19வயதுள்ள சிறுவர்கள் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது முக்கியம். ஆனால், இன்றைய காலகட்டத்தில் வெகு குறுகிய காலத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் நிறுத்தப்படுகிறது. இதனால் குழந்தைகளின் பற்கள் சீராமல் போகும் அபாயம் உள்ளது. 

இந்த சூழலில், எங்கள் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் இல்லாமல் சிறு பயிற்சிகள் மூலம் பற்களை சீராக்க உதவுகிறோம்.

சென்னை, கோவையில் எங்கள் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. குழந்தைக்கு முதல் பல் முளைத்த உடனேயே பல்துலக்குவதை பழக்க வேண்டும்." என்றார்.

தொடர்ந்து நடிகை சமீரா ரெட்டி பேசுகையில், "எனது மகளுக்கு இந்த மருத்துவமனையில் தான் சிகிச்சை அளித்தேன். நல்ல சிகிச்சை முறை கிடைத்ததால் மருத்துவமனையின் புதிய கிளையை துவங்கி வைக்க நானே வந்துள்ளேன்.

தற்போது நான் தமிழ் படங்கள் அதிகமாக பார்ப்பதில்லை. ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களை மட்டுமே பார்க்கிறேன். சூர்யாவுடன் வாரணம் ஆயிரம் படத்தில் நடித்த " மேக்னா"வாக நான் இல்லை. ஒரு தாயாக உள்ளேன்.

எனக்கு கதை சொல்லவும், மற்றவர்களை மகிழ்விக்கவும், படங்கள் இயக்கவும் பிடிக்கும் என்பதால் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறேன். ஜோதிகா சிறந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

நல்ல கதையம்சம் கொண்ட படம் கிடைத்தால் நான் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பேன்." என்றார்.

- சீனி,போத்தனூர்.


Comments