ஏடிஎம் கார்டு மூலம் பணம் திருடியவர் கைது!!

   -MMH 

   கோவை: கொரோனாவில் பலியான பெண்ணின் ஏ.டி.எம்., கார்டை எடுத்து, ரூ.8.5 லட்சம் திருடிய  இருவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை சேர்ந்த முருகசாமி. இவரது மனைவி கடந்தாண்டு கொரோனாவால் பாதித்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். இவரது கணவர் ஏ.டி.எம்., கார்டை தவறுதலாக மருத்துவமனையில் விட்டு சென்றுள்ளார். சில மாதங்களுக்கு பின், முருகசாமி, மனைவியின் வங்கி கணக்கில் பணம் எடுக்க சென்ற போது, 8.5 லட்சம் ரூபாய் குறைவாக இருப்பது தெரியவந்தது அதிர்ச்சியடைந்த இவர் இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

விசாரணையில், மருத்துவமனையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களான அசாம் மாநிலத்தை சேர்ந்த அதுல் ஜோஷி(50),ராஜ் பெங்கான் (38) ஆகிய இருவரும் கார்டை எடுத்து கார்டின் பின்புறத்தில் எழுதியிருந்த நான்கு இலக்கு எண்ணை பயன்படுத்தி, பணத்தை எடுத்ததும் தெரியவந்தது. இவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments