வேலூர் அருகே காரில் கடத்திய குட்கா பறிமுதல் ஒருவர் கைது..!!

 

-MMH

    பெங்களூரில் இருந்து சென்னைக்கு ஆம்னி வேனில் கடத்த முயன்ற ரூ. 2.39 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை கைது செய்தனர்.தமிழகம் முழுவதும் ஆப்பரேஷன் 2.0 என்ற பெயரில் போலீசார் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்பேரில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று  வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்தனர். 

அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆம்னி வேனை போலீசார் மறித்து சோதனை செய்தனர்.அப்பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை மூட்டை மூட்டையாக வேனில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட மூட்டைகளில் இருந்த ரூபாய் 2.39 லட்சம் மதிப்பிலான 334 கிலோ குட்கா புகையிலை பொருட்களை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் தொடர்பாக கார் ஓட்டுநர் ராஜஸ்தானை சேர்ந்த சாவாய் சிங்( 32) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் .அப்பொழுது கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி பகுதியில் இருந்து சென்னைக்கு குட்கா வை கடத்திச் சென்றது தெரியவந்தது.  இந்த சம்பவத்தை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-P.இரமேஷ்  வேலூர்.

Comments