தென் கொங்கின் தொன்மங்கள் நூல் வெளியீட்டு விழா....!!!

   -MMH 

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தென் கொங்கின் தொன்மங்கள் என்ற நூல் வெளியீட்டு விழா ஜிவிஜி கலையரங்கத்தில் நடைபெற்றது. வரலாற்று ஆய்வு நடுவத் தலைவர் குமாரராஜா தலைமை தாங்கினார். தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷினி நூலை வெளியிட்டார்.  

இந்த விழாவில் பேசிய சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியம், மற்றும் திருக்குறளை படைத்த தமிழ் சமுதாயம் ஒன்பதாம், பத்தாம் நூற்றாண்டில் வைணவம் பற்றிய பக்தி இலக்கியங்கள் மட்டுமே படைக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் தமிழர்களின் படைப்பு என்னவாயிற்று என்றும் அன்று பெண் புலவர்கள் பலர் இருந்தார்கள். கல்வி மறுக்கப்படாமல் கல்வி அனைவருக்கும் வழங்கும் உயர்ந்த சமுதாயமாக தமிழ் சமூகம் இருந்திருக்க வேண்டும் என்று பேசினார். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-அலாவுதீன் ஆனைமலை.

Comments