ஊட்டியில் மே 14ல் ரோஜா கண்காட்சி!!

   -MMH 

   ஊட்டி, கோடை சீசனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.ரோஜா பூங்கா 4.40 ஹெக்டர் பரப்பளவில் அமைந்து உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் ரோஜா கண்காட்சி நடக்கவில்லை. தற்போது  கொரோனா தோற்று வெகுவாக குறைந்த நிலையில்  வரும், 14ம் தேதி 17வது ரோஜா கண்காட்சி துவங்குகிறது.  இதற்காக பூங்காவில் பல வண்ணங்களில், 40 ஆயிரம் செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. இதனை பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதோடு, அதனை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள்.

-அருண்குமார் கிணத்துக்கடவு

Comments