வருமான வரி ஏய்ப்பு! - பெட்ரோல் பங்கு உரிமையாளருக்கு 3 மாதம் சிறை தன்டனை!

   -MMH 

   கோவை தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் 37 வயதான கவிதா இவர், பேரூர், அடுத்த சிறுவாணி மெயின் ரோட்டில் ஸ்ரீ குமரன் டிரெய்டர்ஸ் என்ற பெயரில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வந்தார்.

இந்தநிலையில் கவிதா கடந்த 2008 -2009 -ம் ஆண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தார் தனது கணவர் பெயரில் விவசாய நிலம் மூலமாக ரூ. 6 லட்சம் வருமானம் வந்ததாக கணக்கு தாக்கல் செய்தார். இதனை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது கவிதா பெயரிலோ அவரது கணவர் பெயரிலோ எந்த சொத்தும் இல்லை என்பது தெரியவந்தது, மேலும் அவர் ரூ. 6 லட்சம் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து வ விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு கோவை ஜெ எம் 3 கோர்ட்டில் நடந்து வந்தது இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது, வழக்கை விசாரித்த நீதிபதி, வரி ஏய்ப்பு செய்த கவிதாவுக்கு 3 மாதம் கடுங்காவல் தண்டனை ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

நாளையவரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments