பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் தின கொண்டாட்டம்...!!

   -MMH 

   கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நேதாஜி இளைஞர் பேரவை சார்பில்  மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

ஆண்டு தோறும் மே 12 நாளை உலகம் முழுக்க உலக செவிலியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் இனிப்பு வழங்கியும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த தினத்தை கொண்டாடும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் நேதாஜி இளைஞர் பேரவை சார்பில் மரக்கன்று நடும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் மருத்துவமனை ஆர்.எம்.ஓ.டாக்டர்.சரவண பிரகாஷ் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்வில் மருத்துவர் கார்த்திகேயன் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ். நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்.கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம். 26 வது வார்டு நகரமன்ற உறுப்பினர் எம்.சாந்தலிங்கம். நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர் அரிமா மன்னூர் ராமர் , தலைமை செவிலியர்கள் இராமாத்தாள்,ஜெயா, செவிலியர்கள் உமாமகேஸ்வரி சித்ரா ராஜராஜேஸ்வரி ராணி உள்ளிட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவனை ஊழியர்கள்  திரளாக கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்

பொள்ளாச்சி.

Comments