மயான தகன மேடையை ஆட்சியர் ஆய்வு!

    -MMH 

      ஆற்காடு பாலாற்றங்கரை ஓரம் கட்டப்பட்டு வரும் புதிய மின் மயானதகன மேடையை நேரில் சென்று ஆய்வு செய்த ஆட்சியர்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பாலாற்றங்கரை ஓரத்தில் 2019 - 20 ஆண்டின் ஆற்காடு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மின் மயானதகன மேடை கட்டி முடிக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து இறுதிச் சடங்கு செய்ய வரும் உறவினர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் மேலும் மின் மயான தகன மேடையை விரைந்து திறக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் இந்த ஆய்வின் போது ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன், ஆற்காடு நகராட்சி சேர்மன் தேவி பென்ஸ்பாண்டியன், பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.                   

-P.இரமேஷ் வேலூர்.

Comments