இந்தியாவில் தற்போதைய கொரோனா நிலவரம்!!

 

  -MMH   

   இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 1,569 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 1,829 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,27,199 ஆக பதிவாகியுள்ளது.

கொரோனா இறப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 33 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,293 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஒரே நாளில் 2,549 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,87,259 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 15,647 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 1,91,65,00,770 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இந்தியாவில் ஒரே நாளில் 14,97,695 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.  

-வேல்முருகன் சென்னை.Comments