மனைவியின் நடத்தையில் சந்தேகம் - பெட்ரோல் குண்டு வீசிய கணவர்!!

 

-MMH

  மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் பெட்ரோல் வெடிகுண்டு வீசி தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறார். சென்னையில் ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயில் ஊரில் விஷ்ணு என்கிற முப்பது வயது வாலிபர் வீடு வீடாக சென்று பால் பாக்கெட்  வினியோகம் செய்யும் வேலை செய்து வருகிறார்.  இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவி இவரை பிரிந்து சென்று வாழ்ந்து வருகிறார்.   மீண்டும் அவர் விஷ்ணுவுடன் குடும்பம் நடத்த வராததால் விஷ்ணு 26 வயது இளம்பெண் ஒருவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து இருக்கிறார்.அந்த பெண் வடபழனியில் இருக்கும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.   மனைவியின் நடத்தை மீது விஷ்ணுவிற்கு சந்தேகம் வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.


      இது தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது.  அவரிடம் இருந்து கோபித்துக் கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விட்டார்.  அம்மா வீட்டில் இருந்தபடியே வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.   முதல் மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விட்ட நிலையில் இரண்டாவது மனைவியும் தன்னை விட்டுப் புரிந்து சென்று விட்டதால் எங்கே  நிரந்தரமாக பிரிந்து சென்று விடுவாரோ  என்கிற ஆத்திரத்தில் இரண்டாவது மனைவி வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு பெட்ரோல் குண்டுடன் சென்றிருக்கிறார்.அங்கு அலுவலகத்தில் முன்பு பெட்ரோல் குண்டை வீசியிருக்கிறார்


 அதை தனது செல்போனில் வீடியோவாக எடுத்து மனைவிக்கு அனுப்பி மிரட்டியிருக்கிறார்.  பெட்ரோல் குண்டு வீசியபோது அங்கு யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை . ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்ணுவை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.இது தெரிந்து தலைமறைவாக இருந்து வருகிறார்.   மனைவியை மிரட்டுவதற்காக அவரின் அலுவலகத்தில்  பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் வடபழனியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

-நம்ம ஒற்றன்.

Comments