வடபழனியில் உள்ள பிரபல அசைவ உணவகத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல்!!

 -MMH 

அசைவ உணவகமான யா மொய்தீன் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கிளைகளை கொண்ட முன்னணி உணவகம் ஆகும். இந்நிலையில் வடபழனி 100 அடி சாலையில் உள்ள இந்த உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். 

அப்போது அங்கு 50 கிலோ கெட்டுப்போன இறைச்சி இருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த உணவகத்தின் சமையல் அறை 15 நாட்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று தவறு மீண்டும் நடந்தால், உணவகத்திற்கு நிரந்தரமாக சீல் வைக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் பொதுமக்கள் மற்றும் பிரியாணி பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-வேல்முருகன், சென்னை.

Comments