பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி!!

   -MMH 

பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவருமான பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கினார். 

இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் மரு. சுகபுத்ரா இ.ஆ.ப, வருவாய் கோட்டாட்சியர் லதா, வட்டாட்சியர் மதுசூதனன், வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், திமுக  தஞ்சை தெற்கு மாவட்ட துணை செயலாளர் கோவி. அய்யாராசு, தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் நாசர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், மமக மாநில இளைஞரணி துணை செயலாளர் அம்மாபேட்டை மைதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

-மைதீன்.

Comments