அருவியில் தவறி விழுந்த மாணவன் மாயம்! அதிர்ச்சியில் பெற்றோர்!!

   -MMH 

பாலக்காடு: பெருங்கோட்டுக்குருஷி சூலனூர் மண்ணாரம்பொட்ட சுரேஷ்குமாரின் மகன் அகில் (17). இவர் கோட்டாயி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து கொண்டு வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் மகனை காணவில்லை என்று பெற்றோர் ஹேமாம்பிகா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

தீவிர தேடுதல்களுக்கு பிறகு, இவர் நண்பர்களுடன் சேர்ந்து தோணிமலைக்கு சென்றது தெரியவந்துள்ளது. அருவியின் உச்சியை அடைவதற்காக நண்பர்களுடன் குன்றின் மீது ஏறும் போது அகில் வழுக்கி பள்ளத்தில் விழுந்ததாக ஹேமாம்பிகா நகர் போலீசார் தெரிவித்தனர்.

பள்ளத்தாக்கின் உள்ளே பலத்த நீரோட்டம் உள்ளதால் உடனே தீயணைப்பு வீரர்களை அழைத்து மாணவன் விழுந்ததாக சொல்லப்படும் இடத்தில் தேடத்தொடங்கினர். வெகு நேரம் ஆகியும் மாணவன் எங்கும் தென்படவில்லை. வெளிச்சம் இல்லாததால் தீயணைப்பு படையினர் தேடுதல் வேட்டையை நிறுத்தினர். திங்கள்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணி தொடங்கும். 

நாளைய வரலாறு செய்திக்காக,

-இளம் தந்தி.

Comments