மூதாட்டியிடம் நகை பறிப்பு!!

   -MMH 

   கோவை அருகே உள்ள பன்னிமடையை சேர்ந்தவர் நஞ்சம்மாள் (வயது 62). இவர் கோவையில் உள்ள சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக பஸ் மூலம் உக்கடம் பஸ் நிலையம் வந்தார். பின்னர் தன் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அருகே நின்றிருந்த நபரிடம் வழி கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர் நான் அங்குதான் செல்கிறேன் என்னுடன் வாருங்கள் என்று கூறி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் சிக்னல் அருகே வந்தபோது சாலை ஓரத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி நஞ்சம்மாளை இறக்கி விட்டு விட்டு அவர்  நகையை பறித்து  சென்று விட்டார்.

நகையை பறிகொடுத்த நஞ்சம்மாள் ராமநாதபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நஞ்சம்மாளிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Comments