பொள்ளாச்சி அருகே தேங்காய் நார் மஞ்சி ஏற்றிச் சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீ விபத்து!!

      -MMH 

பொள்ளாச்சி அருகேயுள்ள பொன்னாண்ட கவுண்டணூரில் ஜூன் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நேற்று தேங்காய் நார் (மஞ்சி) ஏற்றிச்சென்ற லாரி மின்கம்பியில் உரசி தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. 

தீ கட்டுக்கடங்காமல் சென்றதால் இத்தகவலை பொள்ளாச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை அறிந்த பொள்ளாச்சி தீயணைப்பு நிலை அலுவலர் பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை முற்றிலும் அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் லாரி முற்றிலும் எரிந்து சேதாரம் ஆகியுள்ளது. 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-அலாவுதீன், ஆனைமலை.

Comments