அதிகரிக்கும் கொரோனா தொற்று!!!

 -MMH 

கோவை மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கை மற்றும் கொரோனா தடுப்பூசியை துரிதப்படுத்தியதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா தொற்றால் அதிகளவு பாதிப்பிலிருந்து கொரோனா தொற்று குறைந்திருந்தது.

தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளதால் மத்திய அரசு  மாநில சுகாதார துறையும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த  அறிவித்துள்ளது. இதையடுத்து,  தடுப்பூசி முகாம்களை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மருத்துவமனைகளில் வார்டுகளை தயார் நிலையில் வைக்கவும், தேவையான கருவிகள், ஆக்ஸிஜன் படுக்கைகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் ஏற்கனவே, 20 படுக்கைகளுடன் கூடிய வார்டு உள்ளது. இதில் போதுமான ஆக்ஸிஜன் படுக்கைகளும் உள்ளன. தேவைப்பட்டால், கூடுதல் வார்டுகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை  மேற்கொள்ளப்பட்டதாக கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியுள்ளார்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments