அமராவதி ஆற்றில் இருந்து தண்ணீர் திருட்டு!!

    -MMH 

      திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் கல்லாபுரம் பகுதியில் இருந்து தனியார் கோழிப்பண்ணை வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வந்து விவசாய நிலங்களை வாங்கி அமராவதி ஆற்றின் கரையோரத்தில் கிணறு வெட்டி அதிலிருந்து ராட்சச பைப் மூலம் மானுப்பட்டி கோழிப்பண்ணைக்கு தண்ணீர் திருட்டு தினந்தோறும் நடைபெற்றுவருகிறது.

பல லட்சம் லிட்டர் தண்ணீர் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தும் தெரியாமலும் இரவு பகலாக எடுத்து வருகிறார்கள். நடவடிக்கை எடுக்கக் கூடிய அரசு அதிகாரிகள் தகவல் கொடுத்தால் மெத்தனம் காட்டி வருகிறார்கள். 

இப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் இதுபோன்ற தனியார் முதலாளியிடம் இருந்து அமராவதி ஆற்றை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.

-துல்கர்னி, உடுமலை.

Comments