சிப்பாய் புரட்சி ஆங்கிலயர்களை எதிர்த்து இந்தியாவியில் நடைபெற்ற முதல் புரட்சி!!

 -MMH 

1805 வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி சென்னை மாகாணத்தின் தளபதி ஜான் கிராடக் ராணுவ சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார், இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தாடையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார்.

 சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அணியப்படும் தொப்பி மாடு மற்றும் பன்றியின் தோலினால் ஆனது இந்துக்கள் மாடுகளை புனிதமாகவும் இஸ்லாமியர்கள் பன்றிகளை தீண்டதகதவைகளாக கருதினர்.

அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். இந்த சீர் திருத்தங்களை ஏற்க முடியாது என்று முறையிட்ட அந்தக் கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. அதனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான சிப்பாய்கள் புரட்சி தயாராகிக் கொண்டிருந்தனர்.

 மேலும் இந்திய சிப்பாய்கள் பலர் திப்பு சுல்தான் படைப் பிரிவில் பணியாற்றுபவர்கள் அவர்களுக்கு திப்புவின் பிள்ளைகள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டு இருந்தது கடும் கோபத்தில் ஆழ்த்தியது மேலும் திப்புவின் மரணத்துக்கு பழி வாங்கும் துடித்துக் கொண்டிருந்தனர் அவர்கள் தன் பிள்ளைகளை மீட்டு மீண்டும் ஆட்சியை கொண்டுவர விரும்பினார். வேலூரில் சிறை வைக்கப் பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன்கள் துருப்புக்களுக்கு ஆதரவுக் கொடுத்துத் புரட்சியைதூண்டி விட்டதாகச் சொல்லப்படுகிறது.

வரலாறு நெடுக நோக்கும்போது வீரம் அனைத்தும் துரோகத்தினால் தான் தோற்று இருக்கும் அதே போன்று ஒரு துரோகியை இருந்தான் அவன் பெயர் முஸ்தபா பெக், புரட்சி திட்டமிட பட்ட முதல் தேதி 1806 ஜூன் 17ஆம் தேதி அவன் பிரிட்டிஷ் அதிகாரி போர்ப்ஸ் என்பவரிடம் கலகம் நடக்கப் போகிறது என்று கூறுகிறான் ஆனால் அப்போது அவர்கள் அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை உதாசீனப்படுத்தினர்குடிபோதையில் உளறுவதாக சிறையில் இட்டனர்(புரட்சி தொல்வி அடைந்த பின் அவனுக்கு 2000 வராகன் பணம் வெகுமதியாக கொடுத்தனர் ஆங்கிலேயர், ஆணை கடிதம் இணைத்துள்ளேன்)

1806 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் நாள் திப்புவின் சுல்தான் மகள் திருமணம் , அதில் கலந்துகொள்ள இந்திய வீரர்கள் அனுமதி கேட்டு இருக்கின்றனர், அனுமதியும் வழங்கப்பட்டது 1806 ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் அதிகாலை 2 மணிக்கு புரட்சி வெடிக்கிறது. வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் புரட்சி  தீயில் வெடித்தெழுந்தனர்.

மெட்ராஸ் ரெஜி மெண்ட் 23 வது படைப் பிரிவை சேர்ந்த இந்திய வீரர்கள் சுபேதார் ஷேக் காசிம், ஷேக் காதர்,மற்றும் சேக் உசேன் தலைமையில் அணிவகுத்து உறங்கிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் வீரர்கள் அனைவரையும் கொன்றனர்.

வீரர்கள் ஆயுத கிடங்கை கைப்பற்றி அதன் அதிகாரி கர்னல் பான்கோட்(முதல் களபலியான அதிகாரி, இலருடைய நினைவுவிடம் தனியாக வைத்துள்ளனர் ஆங்கிலேயர்கள்) என்பவரை கொலை செய்தனர் மற்றும் ஆயுதப் படை அதிகாரி கர்னல் மிகிராஸ் என்பவரும் கொல்லப்பட்டார், மேலும் மேஜர் ஆம்ஸ்ட்ராங் உட்பட 12 ஆங்கிலேய அதிகாரிகள் கொல்லப்பட்டனர், அங்கிருந்த 350 பிரிட்டிஷ் ஆட்களில், 100 பேர் மேல் கொல்லப் பட்டனர்.

வேலூர் கோட்டை சிப்பாய்களால் கைப்பற்றபடுகிறது, கோட்டையில் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு திப்பு சுல்தான் புலிக் கொடி ஏற்றப்படுகிறது மற்றும் பதே ஹைதரை மன்னராக அறிவிக்கின்றனர்., அதேசமயம் கோட்டைக்கு வெளியே காவலுக்கு இருந்த மேஜர் காட்ஸ் நிலைமையை புரிந்து கொண்டார், உடனே 14 மைல் தொலைவில் உள்ள ராணிப்பேட்டை புறப்பட்டுச் சென்று அங்கிருந்த படைத்தளபதி கில்லஸ்பி நிலைமையை விவரிக்கிறார்.

ஏழு மணிக்கு கில்லெஸ்பி தலைமையில் ஆங்கிலப் படை புறப்பட்டு வேலூர் வந்தது, காலை 9 மணி அளவில் கில்லெஸ்பி தலைமையில் கர்னல் லெப்ட் வுட்  ஹவுஸ் மற்றும் கென்னடி ஆகியோர் வேலூர் கோட்டையை முற்றுகையிடுகின்றனர். வெற்றியின் களிப்பில் இருந்த இந்திய சிப்பாய்கள் கோட்டைக் கதவைக் கூட அடைக்க மறந்து விட்டனர்,அதுவே பிரிட்டிஷ் வீரர்களுக்கு சாதகமாக அமைந்தது நண்பகலுக்கு முன்பாகவே புரட்சி அடக்கப்படுகிறது.

புரட்சியில் ஈடுபட்ட வீரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர், சிலர் பீரங்கிகளின் வாயில் பகுதியில் கட்டப்பட்டு உடல் சிதறடிக்கபட்டும், கோட்டை சுவர் ஓரம் வரிசையாக நிற்க வைத்து சுட்டு கொல்லப்பட்டனர். புரட்சி தூண்டுதல் காரணமான திப்புவின் ஆண் பிள்ளைகள் அனைவரும் கல்கத்தாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இந்த புரட்சியால் மதராஸ் சென்னை மாநில ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு மற்றும் ராணுவ தளபதி ஜான் கிராடக், தண்டனையாக இங்கிலாந்துக்கு திருப்பி அழைக்கப்பட்டனர்.

வேலூர் சிப்பாய் புரட்சியில் மாண்ட ஆங்கில அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கோட்டைக்கு எதிரே இப்போது உள்ள சிஎஸ்ஐ (CSI CHURCH) தேவாலய வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டு கல்லறை தோட்டம் நிறுவப்பட்டது.

800 அதிகமாக கொல்லப்பட்ட இந்திய சிப்பாய்கள் அனைவரும் அருகில் உள்ள பாலாற்றிலும், கோட்டை கிணற்றிலும் தூக்கி வீசப்பட்டு மறைக்கப்பட்டனர். இந்த புரட்சி பற்றிய அனைத்து ஆங்கிலேயர் ஆவணங்கள் இன்றும் வேலூர் கோட்டை அருங்காட்சியத்தில் காணலாம்.

ஜம்பது வருடங்கள் (1857) கழித்து வடக்கில் நடக்கப் போகும் மிகப்பெரிய சிப்பாய் புரட்சிக்கு இந்த வேலூர் புரட்சி ஒரு முன்னோடியாக அமைந்தது என்பதை அனைவரும் அறியும் வரை பகிர்வோம். பெயர் தெரியாத அந்த சிப்பாய்களின் தியாகத்தை போற்றுவோம்.

-P. இரமேஷ், வேலூர்.

Comments