தனியார் பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள்..!!

    -MMH 

    கோவையில் இருந்து பொள்ளாச்சி வரை மூன்று கிலோ மீட்டர் ஒவ்வொரு பேருந்து நிறுத்தமாக வந்து கொண்டிருந்த நிலையில், சாலை விரிவாக்கம் காரணமாக மேம்பாலம் அமைத்து தங்கள் பகுதியில்  நின்று கொண்டிருந்த தனியார் பேருந்துகள் பாலத்தின் மேல் பகுதியில் செல்வதால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பொள்ளாச்சியில் இருந்து கோவை கோவையிலிருந்து பொள்ளாச்சியும் இயங்கியுள்ள தனியார் பேருந்துகள் குறிப்பிட்ட பேருந்து நிறுத்தும் பகுதியில் மட்டுமே நிறுத்தப்படுகின்றன. இதனால் தங்கள் பகுதியான வேலந்தாவளப்பிரிவு மற்றும் பிரிமியர் மில் பகுதிகளில் பேருந்துகள் நிற்பதில்லை என்ற குற்றச்சாட்டு மக்களுக்கு இடையே எழுந்துள்ளது.

இதனால் கோபம்மடைந்த பொதுமக்கள்  பேருந்து நிற்கும் தங்கள் பகுதியில் பொதுமக்களை இறக்கி விட வேண்டும் என்றும் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர். தனி நபர்கள் ஓட்டுனிடம் அல்லது நடத்துனிடம் கேட்டால் அலட்சிய போக்கான பதில்களை கூறுவதாக தவறான பேச்சுகள் பேசுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் கவனத்தில் எடுத்துக் கொண்டு பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று சேவையாக எண்ணி தங்களது பகுதிகளிலும் பேருந்துகள் நிறுத்த வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக ,

தலைமை நிருபர்

- ஈசா.

Comments