நிரம்பும் நிலையில் அமராவதி அணை! மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

 

    -MMH 

    கடந்த ஒரு வாரமாக கேரள மாநிலம் மறையூர், காந்தலூர் பகுதிகளில்  தென் மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் அமராவதி ஆற்றின் முக்கிய நீராதாரமான பாம்பாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக 12,500 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சிமலைப் பகுதியில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் வியாழ்க்கிழமை மாலை நிலவரப்படி 85 அடியாக உயர்ந்தது. அணை நிரம்ப இன்னமும் 4 அடியே உள்ளது. இதுபோக அமராவதி உப நதிகளான வரதமா நதி, குதிரை ஆறு ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாலும் அமராவதி ஆற்றின் கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறையினர் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பிரதீப்குமார் .தாராபுரம்,

Comments