தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் துவங்கி வைத்தார்!!

   -MMH 

      தாராபுரத்தில் தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை துவங்கி வைத்தார். விழாவை  குத்து விளக்கு ஏற்றி துவங்கிவைத்தார் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ்.Mcom.,BEd .

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் இல. பத்மநாபன், மாவட்ட ஆட்சியர் டாக்டர். வினித். IAS, நகர கழக செயலாளர் கே. எஸ். தனசேகர் கலந்து கொண்டனர்.

கல்லூரி வளர்ச்சி நிதியாக ஒரு லட்சம் ரூபாயை நகரமன்ற தலைவர் பொறியாளர் கு.பாப்புகண்ணன்.ME (str).,LLB., மூலனூர் ஒன்றிய செயலாளர் பழனிசாமி வழங்கினார். உடன் ஒன்றிய பெருந்தலைவர் ஒன்றிய செயலாளர் எஸ்.வி செந்தில் குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் K. செல்வராஜ், குண்டடம் ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகரன், தாராபுரம் நகர மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர்கள்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சரஸ்வதிராஜேந்திரன், பிரபாவதிபெரியசாமி, கல்லூரி முதல்வர், மாவட்டக் கழக, நகர கழக, ஒன்றிய கழக, கிளை கழக இன்னாள் முன்னாள் நிர்வாகிகள் சார்பு அணி கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-துல்கர்னி உடுமலை.

Comments