பசுமை சூழலை பாதுகாக்க புலிகள் அவசியம்! புலிகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி!!

  

புலிகளின் எச்சங்கள் பல்லுயிர் பெருக்கத்திற்கு காரணமாக அமைகிறது. புலிகள் காட்டை விட்டு வெளியேறினால் அங்கு பசுமை சூழல் கெட்டு விடும். 

உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் புலிகளும் ஒன்று. புலிகளை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தி உலகெங்கும் பல ஏற்பாடுகள் செய்து வருகின்றன. 

அந்த வகையில் தமிழ்நாடு வனத்துறையின் சார்பில் ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் WNCT சார்பில் ஆனைமலை வட்டம் ந.மு.சுங்கத்தில் ஜூன் 28 நேற்று புலிகள் தினத்தை முன்னிட்டு புலிகளின் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

புலிகளை காப்போம் புவியை காப்போம். 

-அலாவுதீன், ஆனைமலை.

Comments